மழைக்காலம் வருது! பேருந்து கூரைகளில் இருக்கும் ஓட்டைகளை அடைக்க அமைச்சர் உத்தரவு!! - Seithipunal
Seithipunal


சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்தான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் போக்குவரத்து துறையில் கருணை அடிப்படையிலான பணி நியமங்களை அதிகரிப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் சிவசங்கர் மகளிருக்கான விடியல் பயணத் திட்டத்தை மலைப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவது குறித்து ஆராயுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்துவது, பழைய பேருந்துகளை புதுப்பித்து இயக்கும் பணிகளையும் விரைவுப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

மேலும் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் அரசு பேருந்துகளில் உள்ள குறைபாடுகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்யுமாறு போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister ordered to repair damaged buses due to rainy season


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->