சிறந்த உணவு, வேலை தந்து வாழ வைக்கும் இடமாக மாறிய சிறைச்சாலைகள்.!! அமைச்சர் ரகுபதி பெருமிதம்.!!
Minister Raghupathi is proud that prison has become a place to live
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறைத்துறையின் மானியக் கோரிக்கையின்போது சிறைக் கைதிகளின் நலனுக்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் சிறைவாசிகளின் உணவு முறை மற்றும் உணவின் அளவினை ஆண்டுக்கு 26 கோடி ரூபாய் கூடுதல் செலவினத்தில் மாற்றி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் கடந்த ஜூன் 5ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில் உள்ள சிறை கைதிகளுக்கான புதிய உணவு முறை மற்றும் உணவின் அளவினை மாற்றியமைத்து அந்தத் திட்டத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
சிறையில் இருக்கும் 'பி' பிரிவு சிறை கைதிகளுக்கு காலை 6.30 மணிக்கு தேநீர், காலை 7 மணிக்கு கோதுமை உப்புமா மற்றும் அதன் உடன் இரண்டு வகையான சட்னி, பொங்கல் உடன் சட்னி, தக்காளி சாதம், முட்டை, லெமன் சாதம், புதினா சாதம் என வழங்கப்படுகிறது
காலை 11.30 மணிக்கு சாப்பாடு, குழம்பு, ரசம், பொறியல், வாரத்தில் ஞாயிறு மற்றும் புதன்கிழமை அன்று கோழிக்கறி வழங்கப்படுகிறது. மாலை 3 மணிக்கு தேநீர், சுண்டல் மற்றும் வேர்க்கடலை போன்றவை வழங்கப்படுகிறது. மாலை 4.30 மணியளவில் இரவு உணவாக சப்பாத்தி, சாப்பாடு மற்றும் சாம்பார் ஆகியவை வழங்கப்படுகிறது.
ஏ பிரிவு சிறைவாசிகளுக்கு ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் கோழிக்கறி உடன் உணவு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே சிறைத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தை சட்டத்துறை மற்றும் சிலை துறை அமைச்சர் ரகுபதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ரகுபதி "சிறையில் கைதிகளுக்கு உணவாக களி அல்லது கஞ்சி வழங்கப்படும் என்ற நிலையை மாற்றி ஓட்டலில் கிடைப்பது போல 3 வேளையும் தரமான உணவு வழங்கப்படுகிறது. சிறைவாசிகள் வேலை செய்து மாதந்தோறும் அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் வரை சம்பாதித்து வீட்டிற்கு அனுப்பும் நிலையை தமிழக அரசு உருவாக்கி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிறைகள் தண்டனை பெறும் இடமாக இல்லாமல் வாழவைக்கும் இடமாக உள்ளது" என பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Raghupathi is proud that prison has become a place to live