தமிழ்நாட்டை மறந்த நிர்மலா சீதாராமன்! நிதி ஒதுக்கவிட்டாலும் நல திட்டங்களை செய்வோம் - அமைச்சர் ரகுபதி!
Minister Raghupathi said that Tamil Nadu would have got all the programs if the India alliance had won 35 additional seats
இந்தியா கூட்டணி கூடுதலாக 35 இடங்களில் இடங்களை வந்திருந்தால் தமிழகத்துக்கு எல்லா திட்டங்களும் கிடைத்திருக்கும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 22 ஆம் நாள் பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. ஜூலை 23ஆம் 2024 -25 ஆம் ஆண்டுக்கான நிதி பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. அதற்க்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கணடனம் தெரிவித்தனர்.
நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ரகுபதி பேசியதாவது, தமிழ்நாடு என்று உச்சரிப்பதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தைரியம் இல்லை.
தமிழ்நாடு என்ற பெயரை சொல்லவே பயப்படுகிற அவரால் எப்படி தமிழகத்திற்கு நிதி வழங்க முடியும். எப்போதும் திருக்குறளை பாரதியாரையும் மேற்கோள் காட்டி பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் தற்போது அவர்கள் இரண்டு பேரையும் மறந்துவிட்டார். அதேபோல் தமிழ்நாட்டை மறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சராக ரகுபதி தெரிவித்ததாவது, இந்தியா கூட்டணியில் கூடுதலாக 35 இடங்களை வென்று இருந்தால் தமிழகத்துக்கு எல்லா திட்டங்களும் கிடைத்திருக்கும். மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மக்களின் நல திட்டங்களை தொடர்ந்து செய்வார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Raghupathi said that Tamil Nadu would have got all the programs if the India alliance had won 35 additional seats