நடக்கும் கொலைகளுக்கு தமிழகத்தில் மக்கள் தொகை அதிகரித்தது தான் காரணமா? அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "தமிழகத்தில் நடந்துள்ள கொலை சம்பவங்களுக்கும், அரசாங்கத்திற்கு என்று எந்த தொடர்பும் இல்லை. அனைத்துமே சொந்த காரணங்களுக்காக நடந்துள்ளது. 

இன்றைக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குழையும் அளவிற்கு எந்த சம்பவமும் நடைபெறவில்லை. ஒரு ஒரு காலத்தில் நான்கு கோடி தமிழர்களுக்கு தலைவர் கருணாநிதியை கூறுவோம். இன்று 8 கோடி மக்களுக்கு தலைவராக தலைவர் தளபதி இருக்கின்றார். மக்கள் தொகை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. அதே சமயத்தில் இது போன்ற வன்முறை சம்பவங்களும் கூடவும் செய்யும் குறையவும் செய்யும்" என்று தெரிவித்தார்.

அப்போது, செய்தியாளர் ஒருவர், தமிழகத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கு மக்கள் தொகை தான் காரணம் என்று நீங்கள் சொல்ல வருகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, "மக்கள் தொகை தான் காரணம் என்று சொல்லவில்லை. அன்றைக்கு நாலு கோடி மக்கள் தொகை இருந்தது. இன்று 8 கோடி மக்கள் தொகையாகி இருக்கிறது. சில இடங்களில் பிரச்சனைகள் இருக்கிறது. 

மக்கள் தொகை வன்முறைகளுக்கு காரணமாக சொல்ல முடியாது. ஆனால், இதனால் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் கூடுதலாகவோ அல்லது குறைச்சலாகவோ நடக்கும் என்று தான் நான் சொன்னேன். 

முன் விரோதம் காரணமாகவே இந்த சம்பவங்கள் நடைபெறுகிறது. தவிர அரசாங்கத்தினால் இல்லை. மக்கள் தொகையினாலும் இல்லை. தமிழக காவல்துறையும் தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் முன்பகை காரணமாக புதிய புதிய குற்றவாளிகள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்ல வேண்டுமானால் தமிழகத்தில் A1 பட்டியலில் உள்ள ரவுடிகள் அனைவரையும் சிறை சிறையில் அடைத்து உள்ளோம். 97 சதவீத சிறைச்சாலைகள் நிறைந்து விட்டன" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Ragupathy Say About TN Crime Rate With TN Censes


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->