கட்டணமில்லா பேருந்துத் திட்டத்தால் பேருந்துகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!!
minister s s sivasangar says woman passengers increased in tn govt free bus
கட்டணமில்லா பேருந்துத் திட்டத்தால் பேருந்துகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!!
தமிழக அரசு போக்குவரத்து கழகமான கும்பகோணம் கோட்டத்தில் நூறு பேருந்துகளில் பேருந்து நிறுத்தங்களை 300 மீட்டருக்கு முன்பே அறிவிப்பு செய்யும் ’ஜிபிஎஸ்’ எனப்படும் ’புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான்’ சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நவீன வசதி மூலம் பயணிகள் தங்கள் இறங்கும் இடத்தை முன்கூட்டியே அறிந்து பயனடைவார்கள். இந்த வசதியினை தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் மூலம் பயணம் செய்வோர் எண்ணிக்கை 40 சதவீதமாக இருந்தது. ஆனால், கட்டணமில்லா பயணத்திட்டம் மற்றும் அதற்கான சிறப்பு பேருந்துகள் நடைமுறைக்கு வந்ததும், அந்த எண்ணிக்கை 68 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பல இடங்களில் தங்களுக்கான கட்டணமில்லா பேருந்துகளுக்காக பெண்கள் காத்திருந்து பயணம் செய்வதால், பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.
மற்றபடி, பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துகள் எங்கேயும் குறைக்கப்படவில்லை" என்றார்.
மேலும், இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்டோர், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் முதல் ஹவுசிங் ரோடு வழியாக, மீண்டும் புதிய பேருந்து நிலையம் வரை பேருந்தில் பயணம் செய்தனர்.
English Summary
minister s s sivasangar says woman passengers increased in tn govt free bus