உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய அளவில் கபடி போட்டி! அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தை அடுத்த பழனி அருகே கணகம்பட்டியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார் வரவேற்க நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். இந்த விழாவில் 2,028 பயனாளர்களுக்கு 5.82 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி "திமுகவின் இளைஞரைச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டன்சத்திரத்தில் வரும் ஜனவரி 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நான்கு நாட்கள் அகில இந்திய அளவில் ஏ கிரேட் கபடி போட்டிகள் நடக்க உள்ளது. இந்த கபடி போட்டியில் ப்ரோ கபடி மற்றும் தேசிய அளவிலான கபடி போட்டியில் விளையாடிய வீரர்கள் பங்கேற்பார்கள்.

ஆண் மற்றும் பெண் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற உள்ளது. ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு 20 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 15 லட்சம் ரூபாயும், மூன்றாம் இடம் அணிக்கு 7.5 லட்சம் ரூபாயும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு 7.5 லட்சம் ரூபாயும் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது. 

அதேபோன்று பெண்கள் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு 15 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 10 லட்சம் ரூபாயும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு 5 லட்சம் ரூபாயும், நான்காம் இடம் பிடிக்கும் அணிக்குணிக்கு 5 லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது. அதேபோன்று ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சிறந்த மூன்று வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது" என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister sakkrapani announced Kabaddi matches conducting for Udhayanidhi birthday


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->