அண்ணாமலை காமராஜரை கலங்கப்படுத்துகிறார் - அமைச்சர் சேகர் பாபு ஆவேசம்.!
minister sekar babu speech about bjp leader annamalai
நேற்று பாஜக சார்பில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்திடவும், 5-ம் வகுப்பு வரை தமிழ்மொழியை கட்டாயமாக்கிடவும், ஏழை மாணவர்களுக்கு சமமான கல்வியை வழங்க மறுக்கும் திமுக அரசை கண்டித்து திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர் அண்ணாமலை தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்த கூட்டுக்குழு கூட்டத்தை உப்புசப்பில்லாத கூட்டம் என்றும், அமைச்சர்கள் குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளதாவது:- படிக்காதோர் எப்படி பள்ளி பற்றி பேச முடியும் என்ற அண்ணாமலையின் கூற்று காமராஜரை கலங்கப்படுத்தும் விதமாக உள்ளது.
படிக்காதவர்களும் சேவை செய்வார்கள் என்பது அண்ணாமலை போன்ற தற்குறிகளுக்கு தெரியாது. உப்பு சப்பில்லாத கூட்டத்தை பற்றி நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்? என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
English Summary
minister sekar babu speech about bjp leader annamalai