அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செயற்கை சுவாசம்.!! 24 மணி நேரம்தான் கெடு..!! பரபரப்பில் காவேரி மருத்துவமனை..!!
Minister Senthil Balaji on artificial respiration with ventilator
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று அதிகாலை 5.15 மணிக்கு மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்துவர் குழுவால் இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை குறித்து காவேரி மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் "அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. புதிய ரத்த நாளம் மூலம் இருதய தமணியில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டது. இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த 4 அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருந்து வருகிறது. தற்போது அவர் சிறப்பு இருதய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் அமைச்சர் செந்தில் பாலாஜி கண் விழித்ததை தொடர்ந்து மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தனர். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று அறுவை சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜிக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் மருத்துவ குழுவினரால் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், 24 மணி நேரத்திற்கு பிறகு செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு இயற்கையாக சுவாசிக்க தொடங்குவார் எனவும் காவேரி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Minister Senthil Balaji on artificial respiration with ventilator