எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு துரோகம் செய்தவர் - அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி.!
minister senthil balaji press meet after budget submit
இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமானது. இந்தக் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நடப்பாண்டுக்கான பட்ஜெட் உரையை வாசித்துள்ளார். அதில் பல முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்திப்பில் பேசியதாவது: "இந்த தமிழக பட்ஜெட் வரலாற்று சிறப்புடையது. முதலமைச்சர் கடந்த இரண்டு ஆண்டுகளாக உழைத்து வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை மக்களுக்கு வழங்கியுள்ளார்.
இந்த பட்ஜெட்டில் சென்னை மெட்ரோவுக்கு ரூ.10 ஆயிரம் கோடியும், கோவை மெட்ரோவுக்கு ரூ.9 ஆயிரம் கோடியும், மதுரை மெட்ரோவுக்கு ரூ.8,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கீடுகள், புதிய திட்டங்கள், மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிலர் குறை சொல்வதற்காகவே செயல்பட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால், முழு நிதிநிலை அறிக்கையையும் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் கேட்காமல் பாதியிலேயே வெளி நடப்பு செய்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி குறுக்குவழியில் ஆட்சியில் அமர்ந்துவிட்டு தமிழக மக்களுக்கு துரோகத்தை செய்தவர். நிதிநிலை அறிக்கையை பற்றி அவர் கூறிய கருத்துக்கள் மிக மிக கீழ்தரமானவை. அவர் அரசியல் செய்யவேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.
English Summary
minister senthil balaji press meet after budget submit