செந்தில் பாலாஜி "தனி அறைக்கு" மாற்றம்... அறை எண் 435ஐ ஒதுக்கியது காவேரி மருத்துவமனை.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  பாலாஜி இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தற்பொழுது அவசர சிகிச்சை பிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். காவேரி மருத்துவமனையின் 7வது தளத்தில் இருந்த அவசர சிகிச்சை பிரிவில் கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தற்பொழுது 4வது தளத்தில் உள்ள அறையில் 435க்கு மாற்றப்பட்டுள்ளார். தனியறைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Senthil Balaji shifted to private room


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->