''மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தான் அரசு செயல்பட முடியும்'' - அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு போதிய இட வசதி இல்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். 

இதற்கு தமிழக அரசு, ஜனவரி 24ஆம் தேதி அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிழமை பேருந்து நிலையத்திலிருந்து செயல்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு பேசியபோது,

ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்களுக்கு ஏற்றவாறு அரசு செயல்பட முடியாது மக்களுடைய தேவைகளுக்கு மக்களுடைய விருப்பத்திற்கு தான் அரசு செயல்பட முடியும். 

ஏற்கனவே ஆம்னி பேருந்து உரிமையாளர்களோடு பேருந்து நிலையம் திறப்பதற்கு முன்பாகவே போக்குவரத்து துறை செயலாளர், வீட்டு வசதி வாரிய செயலாளர் ஆகியோருடன் கூட்டம் நடைபெற்றது. 

அந்த கூட்டத்தில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி ஆம்னி பேருந்துகள் படிப்படியாக இயக்குவோம் என அறிவித்திருந்தார்கள். மீண்டும் அவர்கள் கால அவகாசம் கேட்டதற்கு இணங்க 24 ஆம் தேதியில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்குவோம் என தெரிவிக்கப்பட்டது.

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை வைத்து இன, மத பிரச்னைகளை ஏற்படுத்தி தமிழ்நாட்டின் அமைதிய சீர்குலைத்து கலவரத்தை உண்டாக்க நினைத்தவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.

மத்திய அரசு மத, இன ரீதியான குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு அரசு மீது சுமத்த பார்க்கிறது. உரிய அனுமதி எதுவும் பெறாமல்  கோயில்களில் குண்டர்கள் போல எல்இடி திரைகள் அமைத்து பதற்ற நிலையை ஏற்படுத்தினர். 

இன்றிலிருந்து ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து செயல்படாது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தான் ஆம்னி பேருந்துகள் இயக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்து உரிமையளர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் செயல்பட முடியாது. தமிழ் அரசுக்கு ஒத்துழைத்தால் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் நல்லுறவு நீடிக்கும்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மக்களின் வசதிக்காக திட்டமிட்டு கட்டப்பட்டது. ஆம்னி பேருந்துகளுக்கு ஏற்றார் போல் கிளாம்பக்கத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Shekharbabu sensational interview


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->