கோரமண்டல் ரயில் விபத்து.. அமைச்சர் சிவசங்கர் தலைமையில் அதிகாரிகள் குழு ஒடிசா பயணம்..!! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா ரயில் நிலையம் அருகே சென்ற கொண்டிருக்கும் பொழுது சரக்கு ரயிலுடன் மோதியதில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் வரை தடம்புரண்டு உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விபத்தில் தற்பொழுது வரை 179 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் 500க்கும் மேற்பட்டோர் இந்த ரயில் விபத்தில் சிக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விபத்து குறித்து ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் தமிழக முதல்வர் மு.க ஸ்டலின் தொலைபேசி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக இருப்பதாக முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதி அளித்தார்.

இந்த நிலையில் தமிழக அமைச்சர் சிவசங்கர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் குழு நாளை ஒடிசா பாலசோர் மாவட்டத்திற்கு செல்ல முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் மீட்பு மற்றும் உதவி பணிகளுக்காக அமைச்சர் சிவசங்கர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் குழு நாளை ஒடிசா விரைகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Sivashankar led a officials teams to Odisha


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->