ராயபுரம் : ரூ.25 லட்சம் மதிப்புள்ள அங்கன்வாடி மையம் - அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்.! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே உள்ள ராயபுரம் கரீம் மொய்தீன் தெருவில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மையம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். 

அதன் பின்னர் அங்கன்வாடி மையத்திற்கு வருகை தந்த குழந்தைகளுக்கு பழம் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 

இதைத்தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கன்வாடி பணியாளர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, "குழந்தைகளை நல்ல முறையில் கவனித்து கொள்ளவேண்டும். 

அவர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவினை சிறப்பாக வழங்கிட வேண்டும் என்று பல அறிவுரைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், தொகுதி எம்.எல்.ஏ, தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister uthayanithi stalin open anganwadi center in rayapuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->