நெல்லை அரசு விடுதியில் 22 செல்போன்கள் திருட்டு! - Seithipunal
Seithipunal


நெல்லையில் அரசு மாணவர் விடுதியில் புகுந்து 22 செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே ஆதிதிராவிடர் அரசு விடுதி உள்ளது. இந்த விடுதியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

நேற்று சம்பவத்தன்று இரவு உணவுக்கு பின் மாணவர்கள் தங்கள் செல்போன்களை விடுதியில் உள்ள அறையில் சார்ஜ் போட்டு வைத்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் விடுதியின் சுவர் ஏறி உள்ளே குதித்து  அவர்கள் வைத்திருந்த சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 22 செல்போன்களை திருடி சென்றுள்ளனர்.

மாணவர்கள் அறைக்கு வந்த பார்த்தபோது செல்போன்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்ததை அடுத்து விடுதிக்காப்பாளர் கண்ணன் என்பவருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். கண்ணன் மேலப்பாளையம் போலீசாருக்கு  இது தொடர்பாக தகவல் கொடுத்துள்ளார்.

தகவலின் பெரில் விடுதிக்கு வந்த போலீசார்  விடுதி முழுவதும் தீவிரமாக சோதனை நடத்தினர் மேலும் அங்கு பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதில் மர்ம நபர் ஒருவரின் உருவம் மட்டும் பதிவாகியுள்ளது. ஆனால் அது தெளிவில்லாமல் இருப்பதால் அதன் அடிப்படையில் போலீசார் மர்ம நபர்களை வலை வீசி தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Miscreants stole 22 cell phones by breaking into government student hostel in Nellai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->