தேர்தல் அதிகாரி மீது தாக்குதல் | நீதிமன்றத்தில் ஆஜரான முக அழகிரி!
MK Alagiri in madurai court
கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, மதுரை, மேலூர் அருகே உள்ள வெள்ளலூர் அடுத்த அம்பலக்காரன்பட்டி வல்லடிக்காரர் கோவிலுக்குள் கிராம மக்களுடன் மு.க அழகிரி ஆலோசனை நடத்தினார்.
அப்போது பொது மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுகவினர் புகார் அளித்தனர். தேர்தல் அதிகாரியும், தாசில்தாரமான காளிமுத்து தலைமையிலான தேர்தல் அலுவலர்கள் கோயிலுக்குள் சென்று அங்கு நடந்த நிகழ்வுகளை படம் பிடித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த மு.க அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் மு.க அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உட்பட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், இன்று வழக்கு சம்மந்தமாக முக அழகிரி நீதிமன்றத்தில் நேரில் அராஜராகினர்.
English Summary
MK Alagiri in madurai court