#குடிநீர்_தொட்டியில்_மலம் : முதல்வர் ஸ்டாலின் கொடுத்த உத்தரவாதம்.!
Mk Stalin About Vengaivayal issue
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூரில், வேங்கை வாசல் தெருவில் வசிக்கும் பட்டியல் சமூக மக்கள் குடிநீருக்காக உள்ள குடிநீர்த் தேக்கத் தொட்டி குடிநீரைக் குடித்த சிறுவர்கள் உடல் நலன் கெட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவர்கள் குடிநீரால்தான் சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என்பதை உறுதி செய்தனர். பின்னர் வேங்கை வாசல் குடிநீர்த் தேக்கத் தொட்டியிலிருந்த தண்ணீரை ஆய்வு செய்த போது அதில் மனித மலம் கலந்து இருப்பதை அறிந்து, உடனடியாக இறையூருக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் விரைந்து சென்று நேரில் ஆய்வு நடத்தினார்.
ஆய்வில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் சிலர் மலம் கழித்து வந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தகாத வார்த்தைகளால் பேசியதாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் சட்டத்தின் கீழ் மாற்று சிங்கம்மாள் என்ற பெண்மணியும், இரட்டைக்குவளை முறையை கடைப்பிடித்து வந்த மூக்கையா என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று இது குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் புதுக்கோட்டை வேங்கை வயல் சம்பவத்தில் குடிநீரில் மலம் கலந்த நபர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
English Summary
Mk Stalin About Vengaivayal issue