பாஜகவுக்கு சரிக்குச் சமமாக இருக்க வேண்டும் - மு.க. ஸ்டாலின் அறிவுரை.! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இந்தியா கூட்டணி நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தமிழகத்தின் முதல்வர் மு.க ஸ்டாலின் திமுக எம்பிக்கள் கூட்டத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அப்போது கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- "370 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.  400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி 240க்கு பாஜக அரசு இறங்கிவிட்டது.

இந்தச் சூழலில் நாம் தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து வாதாட வேண்டும், போராட வேண்டும். ஒரு விதத்தில் பார்த்தால் பாஜகவுக்கு சரிக்குச் சமமாக இந்தியாக் கூட்டணி எம்.பி.க்கள் இருக்கப் போகிறோம். 

இந்த வாய்ப்பை ஆக்க பூர்வமான விவாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். பலவீனமான பாஜக அரசை, நம் முழக்கங்கள் மூலம் செயல்பட வைக்க வேண்டும்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin advise parliment members


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->