எனக்கு இனிமே இவர்தான் அப்பா- முக ஸ்டாலின்..!
ஒரு அப்பாவாக, எனது பெரியப்பா பொதுச்செயலாளர் க. அன்பழகன் வழிநடத்துவார்.
திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி, உடல்நல குறைவால் காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பல்வேறு போராட்டத்திற்கு பிறகு மெரினாவில் அண்ணா நினைவகம் அருகே கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து, அந்த பதவி காலியானது.
இதையடுத்து, நேற்று முன் தினம் திமுக தலைவர் பதவிக்கு முக ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் அவர்களும், போட்டியிடுவதற்கான மனுவை, அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதியிடம் தாக்கல் செய்தனர்.
இதனை தொடர்ந்து, இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூடியது. இதில், முக ஸ்டாலின் திமுக தலைவராகவும், முதன்மை செயலாளராக இருந்த துரைமுருகன் பொருளாளராக பொறுப்பேற்கும் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.
இந்நிலையில், திமுக தலைவராக பொறுப்பேற்ற பின் பொதுக்குழுவில் முக ஸ்டாலின் முதன்முறையாக உரையாற்றினார். அதில், " இதுவரை தலைவர் கருணாநிதிதான் என்னை வழி நடத்தினார். இனிமேல் அவரிடத்தில் இருந்து ஒரு அப்பாவாக, எனது பெரியப்பா( பொதுச்செயலாளர் க. அன்பழகன்) வழிநடத்துவார். அனைவரும் கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் எனவும் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் கோரிக்கை வைத்தார்.
English Summary
mk Stalin Elected Leder OF DMK . Stalin Talking