பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை - சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்கிறார் மு.க.ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை கடந்த 6-ந்தேதி தொடங்கிய கூட்டத் தொடரின் ஒரு பகுதியாக, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 3-வது நாளாக இன்று நடைபெற்றது.

உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.துணை சபாநாயகர் பிச்சாண்டி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு,சென்னை கலங்கரை விளக்கம் முதல் நீலாங்கரை வரை 15 கிமீ கடல் மேல் பாலம் கட்டுவது தொடர்பான முதற்கட்ட ஆய்வு மற்றும் திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசித்து, இதற்கான முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.தூய்மை பணியாளர்களுக்கான திட்டம்:மற்றொரு கேள்விக்கு பதிலளித்த முன்னோக்கு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் கே.என். நேரு,அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் மூலம் தூய்மை பணியாளர்களின் குடும்பங்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் முயற்சி தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

வினா-விடை நேரம் முடிந்த பின்,பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்ட திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ளார்.

இதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யும் அரசின் முயற்சிக்கு மேலும் வலுவூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin files amendment bill for severe punishment for crimes against women


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->