வீட்டு வசதி இல்லாதவர்களுக்கு புதிய வீடு - முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு.!
mk stalin order build new house to without house peoples
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 14 மாவட்ட ஆட்சியர்களுடனான நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பேசியதாவது:- "வீட்டுவசதி இல்லாதவர்களுக்கு வீட்டுவசதி இல்லாதவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தருவதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மழைக்காலம் தொடங்கப் போகிறது. ஏரி, குளம், குட்டை, கண்மாய்களை தூர்வாரி, குடிமராமத்துப் பணிகளை மேற்கொண்டு, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையடுத்து அந்தக் கூட்டத்தில் பேசிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர், "முழுமையான சேதம் மற்றும் பகுதியாக சேதமடைந்த வீடுகள் என்று இருவகைப்படுத்தியுள்ளதாகவும், அதில், 1360 வீடுகள் முழுமையாக சேதமடைந்த வீடுகள் என்று கண்டறியப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் நான்கு இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அங்கு தங்கியிருக்கும் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல மிக்சாம் புயலால் தொழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலமாக கடன் உதவி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுவினருக்கும் அவர்களின் கடனுதவி அளவினை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
mk stalin order build new house to without house peoples