உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் - மு.க ஸ்டாலின்..!
mk stalin request supreme court branch in chennai
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மெட்ராஸ் பார் அசோசியேசனின் 160வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இவருடன் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- "இந்தியாவிலேயே தலைசிறந்த பாரம்பரியம் கொண்டது சென்னை உயர்நீதிமன்றம். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் வழக்கறிஞர்களின் பங்கு முக்கியம். அரசமைப்பின் முக்கிய விஷயமான கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்பட்டு வருகிறது.
கல்வி நிதி போன்றவற்றில் மாநில அரசுகள் பாதிக்கப்படுகின்றன. அரசமைப்பை பாதுகாப்பதில் சிறந்த பங்களிப்பை சென்னை உயர்நீதிமன்றம் அளித்து வருகிறது. உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும். தென் மாநில மக்கள் வழக்கறிஞர்களுக்கு பயனாக அமையும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
mk stalin request supreme court branch in chennai