தொண்டர்கள் இல்லாமல் திமுக இல்லை - முப்பெரும் விழாவில் மு.க ஸ்டாலின் பேச்சு.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி 'பேரறிஞர்'அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் உள்ளிட்டவற்றை இணைத்து முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கம். 

அதன் படி, இந்தாண்டு தி.மு.க. தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததால், முப்பெரும் விழாவோடு சேர்த்து பவள விழாவும் கொண்டாடப்படுகிறது.

இந்த விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தற்போது தொடங்கியுள்ளது. மேலும் இந்த முப்பெரும் விழாவில் கட்சியில் சிறப்பாக பணியாற்றுபவர்களை அடையாளம் காட்டும் விதமாக, விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. 

அதன்படி, இந்த ஆண்டிற்கான விருது பெறுபவர்களும் அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கி உரையாற்றினார். அதாவது, தொண்டர்கள் இல்லாமல் திமுக இல்லை; தொண்டர்கள் இல்லாமல் நான் இல்லை" என்று பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin speech in three grand festival


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->