முதல்வர் ஸ்டாலின் திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு இன்று முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களுக்கு சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளார்.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதிய திட்டங்களை தொடங்கியும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்.

அதன்படி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று முதல் 4 நாட்களுக்கு திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி செல்லும் ஸ்டாலின் அங்கிருந்து இரவு நாகை செல்கிறார்.

அதன் பின்னர் நாளை திருக்குவளையில் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

மேலும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வரின் கள ஆய்வுத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

அதன் பின்னர் ஆகஸ்ட் 27ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் சென்னை திரும்புகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin travelling to thiruvarur and nagai today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->