தகுதியான 1,06,50,000 மகளிர்க்கு ₹1000 உரிமைத்தொகை! மு.க ஸ்டாலின் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான இறுதிக்கட்ட ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசின் முதன்மை செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கான தகுதியான குடும்பத் தலைவிகள் தேர்ந்தெடுக்க சிறப்பு முகாம் மூலம் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், அவர்களில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் உரிமைத் தொகை பெற தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் அவரவர் வங்கி கணக்கில் செப்டம்பர் மாதம் முதல் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 50 லட்சம் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலனை செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்த காஞ்சிபுரத்தில் இந்த திட்டத்தினை தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். சந்தேகம் உள்ள குடும்பத் தலைவிகள் மீண்டும் விண்ணப்பித்தால் அதனை பரிசளிக்க வேண்டும் எனவும், இதன் மூலம் மகளிருக்கு அரசின் மீது நம்பிக்கை ஏற்படும் எனவும் தமிழக முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin said 1crore 6lakhs women eligible to magalir urimai thogai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->