இந்தியாவின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படும்! - மு.க ஸ்டாலின் பேச்சு! - Seithipunal
Seithipunal


பாளையங்கோட்டையில் நடைபெறவுள்ள பொருநை இலக்கிய விழாவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கினார். ஸ்டாலின் வழங்கிய வாழ்த்துரையில் "தமிழ் சமுகமானது இலக்கிய முதிர்ச்சியும் பண்பாட்டின் உச்சத்தையும் அடைந்து பெருமைக்குரிய சமுகம்! கீழடியை தொடந்து சிவகளை, கொற்கை என பல அகழ்வாய்வுகள் வழியாகவும் பல்வேறு முன்னெடுப்புகள் வழியாகவும் அறிவியல்பூர்வமாக நிறுவப்படும் நமது தொன்மை நம்முடைய பெருமை! 

இந்த பெருமையினை அடுத்து தலைமுறைக்கு எடுத்துச்சென்று, அறிவுசார் சமுகத்தை வார்த்தெடுக்கும் இலக்குடன் இலக்கியத் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. தமிழின் செழுமைமிகு இலக்கிய மரபுகளை போற்றும் விதமாக பொருநை, வைகை, காவிரி, சிறுவாணி, சென்னை என ஐந்து இலக்கிய திருவிழாக்களை தமிழ்நாடு அரசு நடத்துகிறது.

இதில் முதல் நிகழ்வாக அன்னைமடியான பொருநை ஆற்றங்கரையில் முன்னெடுக்கப்பட்டு இருக்கும் இந்த இலக்கிய திருவிழா சிறந்ததொரு முயற்சி. "அறிவை விரிவு செய் அகண்டமாக்கு" என்று பாரிவேந்தர் சொன்னதற்கிணங்க நமது தமிழ் மண்ணில் செழுமைமிக்க இலக்கிய பண்பாட்டினை உலகிற்குப் பறைசாற்ற நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவிற்கு எனது வாழ்த்துக்கள்! இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்" என தனது வாழ்த்துரையில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MkStalin says India history will be written from Tamil land


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->