ஸ்டேட் வங்கியில் வேலை - இணையதளம் மூலம் பணமோசடி.! - Seithipunal
Seithipunal


ஸ்டேட் வங்கியில் உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, விண்ணப்பதாரர்களின் பெயர்ப் பட்டியலை சில இணையதளங்கள் வெளியிட்டு வருகின்றன. இதைப்பார்த்த பொதுமக்கள் அந்த இணையதளங்களை தொடர்புகொண்டு பேசும்போது மோசடிக்கு ஆளாகி வருகின்றனர். 

இது குறித்த புகார்கள் ஸ்டேட் வங்கி நிர்வாகத்திற்கு வந்ததையடுத்து, வங்கி தரப்பில் பொதுமக்களுக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த அதிகாரபூர்வ அறிவிப்பில், “சில மோசடியாளர்கள், பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளங்களைப் போன்று தோற்றமளிக்கும் வகையில் போலி தளங்களை ஹோஸ்ட் செய்துள்ளதாக எங்களுக்குத் தெரிய வந்துள்ளது. இந்த இணையதளங்களில், எஸ்பிஐ பெயரில் போலி நியமனக் கடிதங்களும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஸ்டேட் பாங்க் இணையதளத்தில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்கள் ஒருபோதும் வெளியிடுவதில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். விண்ணப்பதாரரின் வரிசை எண் மற்றும் பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே எஸ்பிஐ அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்படும்.

மேலும் தேர்வான விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக எஸ்எம்எஸ், மின்னஞ்சல் மற்றும் தபால் வாயிலாக உரிய தகவல்கள் தெரிவிக்கப்படும். காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவது தொடர்பான அறிவிப்பு, நேர்காணல் அட்டவணை, தேர்வானவர்கள் விவரம் உள்ளிட்ட அனைத்தும் இந்த அதிகாரபூர்வ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

money fraud for buy work in state bank


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->