அவசர தேவைக்காக பணம் எடுக்கச் சென்ற நபர் - ஏ.டி.எம்மில் காத்திருந்த பேரதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூர் அருகே எத்தலப்பநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. வேடசந்தூரில் உள்ள தனியார் மில்லில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர் அய்யலூரில் இருந்து எரியோடு செல்லும் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் நேற்று இரவு ரூ.4 ஆயிரம் பணம் எடுத்துள்ளார். 

அப்போது, ஏழு 500 ரூபாய் நோட்டும், இரண்டு 200 ரூபாய் நோட்டும், ஒரு 100 ரூபாய் நோட்டும் வந்துள்ளது. இதில் 500 ரூபாய் நோட்டுகள் கிழிந்த நிலையிலும், டேப் ஒட்டியிருந்ததாலும் திருமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். மேலும் பணம் எடுத்தற்கான குறுஞ்செய்தியும் தாமதமாக வந்துள்ளது.

இது குறித்து அவர் பேசியதாவது, அவசர தேவைக்காக பணம் எடுக்கும்போது இதுபோன்ற கிழிந்த நோட்டுகள் வந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் ஏ.டி.எம். எந்திரங்களில் நல்ல நிலையில் உள்ள நோட்டுகளை மட்டும் வைக்க அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

money torn from atm mechine in dindukal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->