இரண்டாவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தினர்! - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, புஷ்பவனம், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தினர் அதிக கடல் சீற்றத்தாலும், பலத்த சூறைக்காற்று வீசுவதாலும் இரண்டாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சொல்லவில்லை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஒரு வார காலமாக மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலைகளில் இறால், திருக்கை, நண்டு, ஷீலா என அனைத்து வகையான மீன்களும் கிடைத்து வந்த நிலையில் தற்போது மீனவர்களுக்கு இந்த கடல் காற்று மாறுபாடு ஏமாற்றம் அளித்துள்ளது.
இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. 

கடற்கரைப் பகுதி கரை தட்டி நிற்கும் பைபர் படகுகளோடு கடல் வெறிச்சோடி காணப்படுகிறது. 

காற்றின் வேகத்தால் மீன்பிடிக்க சொல்ல இயலாத மீனவர்கள் 2 நாட்களாக வீட்டில் முடங்கியுள்ளனர். 

காற்றின் வேகம் மாறி இயல்பு நிலைக்கு திரும்பினால் ஓரிரு நாட்களில் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க செல்வோம் என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

More than 10 fishing villages did not go to the sea for fishing for the second day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->