காலை உணவு திட்டம் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட பெண் அதிகாரி பணியிடை நீக்கம்! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர், வேப்பூர் வட்டாரத்தில் உள்ள சில பள்ளிகளில் காலை உணவு தயாரிக்க உணவுப் பொருட்கள் இல்லை தேவைப்படும் உணவு பொருட்களை ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி தலைமை ஆசிரியரிடம் பணம் பெற்று பொருட்கள் வாங்கி உணவு தயார் செய்யவும் அது தவிர வேறு வழி இல்லை.

இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார் என உணவு தயாரிக்கும் மகளிர் சுய உதவிக் குழுவினர் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள பெண் அலுவலர் வாட்ஸ் அப் குழுவில் குரல் பதிவு அனுப்பிய ஆடியோ வைரலானது. 

ஆனால் இது தொடர்பான தகவல் தவறானது என மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை காலை உணவு திட்டம் குறித்து பரப்பியதாக வேப்பூர் வட்டார ஒருங்கிணைப்பாளரை வட்டார வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

morning breakfast shamed famation woman suspend


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->