ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள்கள் என 3 பேர் தற்கொலை.. வெளியான அதிர்ச்சி கடிதம்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் இயேசுநாதன். இவருக்கு அனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சகாய திவ்யா என்ற 19 வயது மகளும், சகாய பூஜா மௌலிகா என்ற 16 வயது மகளும் இதில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் ஓட்டுனராக வேலை செய்த இயேசு நாதன் உடல்நலக்குறைவால் காலமானார்.

மூத்த மகள் திவ்யா பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பூஜா அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். என்ன நிலையில் கணவர் இல்லாததால் மகள்களை படிக்க வைக்கவும் அன்றாட வாழ்க்கையை நடத்தவும் அனிதா கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை பார்த்து வந்துள்ளார்.

ஆனால் ஒரு கட்டத்தில் அனிதாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்ல முடியாமல் பணகஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனது மகள்களிடம் மனம் விட்டு பேசி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு அனிதாவும் அவரது இரண்டு மகள்களும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து புரிந்து வந்த போலீசார் உயிரிழந்த மூன்று உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அனிதா எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் எனது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு தாய் என்ற முறையில் எனது இரண்டு மகள்களை கவனிக்க முடியவில்லை. பணப்பிரச்சினை ஏற்பட்டு மன உளைச்சல் அதிகமானதால் நானும், எனது மகள்களும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother and daughter 3 memebers suicide in kanniyakumari


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->