சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் - சிக்கிய தாயின் கள்ளக்காதலன் போக்சோவில் கைது - Seithipunal
Seithipunal


சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சீனதங்கல் பகுதியை சேர்ந்தவர் மூன்று பெண் குழந்தைகளின் தாய். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பரசுராமன் (41) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு அந்தப் பெண் தனது 17 வயது மகளை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மில்லில் வேலைக்காக சேர்த்து விட்டு மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். இவருக்கு உதவியாக பரசுராமனும் வந்து சென்றுள்ளார். இதையடுத்து சிறுமியிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை என்பதால் தாய் மீண்டும் மில்லுக்கு சென்று மகள் குறித்து விசாரித்துள்ளார்.

அப்பொழுது வேலைக்கு சேர்ந்த மறுநாளே பரசுராமன் சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இது குறித்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், சிறுமியை பரசுராமன் கடத்திச் சென்றதும், அவர்கள் திருப்பூரில் இருப்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பரசுராமன் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பரசுராமனை கைது செய்தனர். பின்பு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mother illegal lover arrested for kidnapped and raped a girl in erode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->