நில மோசடி வழக்கு... தலைமறைவானாரா எம்.ஆர். விஜயபாஸ்கர்! ஆதரவாளர்கள் வீடுகளில் திடீர் ரெய்டு.!
MR Vijayabaskar supporters houses cbcid raid
கரூர், மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் போலியான பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுப்பதாக காவல் நிலையத்தில் மற்றும் எம்.பி. அலுவலகத்தில் பிரகாஷ் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நில மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டதால் விஜயபாஸ்கர் கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த முதன்மை நீதிமன்ற நீதிபதி எம் ஆர் விஜயபாஸ்கரின் முன்னாள் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனை அடுத்து எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவானதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் இன்று சி.பி.சி.ஐ.டி போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர் வீடுகள் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர் வீடுகளிலும் போலீசார் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வேலாயுதம் பாளையத்தில் உள்ள செல்வராஜ் என்பவரது வீட்டிலும் சிபிசிஐடி போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
MR Vijayabaskar supporters houses cbcid raid