குடிபோதையில் மீன் பிடிக்கச் சென்ற மாநகராட்சி ஊழியர் - சேற்றில் சிக்கி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


குடிபோதையில் மீன் பிடிக்கச் சென்ற மாநகராட்சி ஊழியர் - சேற்றில் சிக்கி உயிரிழப்பு.!

சென்னையில் உள்ள அடையாறு ஆற்றில் ஒருவர் தவறி விழுந்ததாக சைதாப்பேட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் எட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

சுமார் பதினைந்து மணி நேர தேடுதலுக்கு பிறகு மீட்புப் படையினர் ஆற்றில் சிக்கிய நபரை சடலமாக மீட்டனர். இந்த உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் உயிரிழந்தவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சின்னமலை தெருவைச் சேர்ந்த எடிசன் என்பது தெரிய வந்தது. 

மேலும், இவர் மாநகராட்சியில் ஒப்பந்தம் முறையில் ஊழியராக பணியாற்றி வந்ததும், நேற்று மதியம் இவர் மதுபோதையில் அடையாறு ஆற்றில் இறங்கி மீன் பிடிக்கச் சென்ற போது தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

muncipal corporation employee died in adaiyaru river


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->