காலையிலே சோகம்! ஊருக்கு உபதேசம்! சரமாரியாக வெட்டி கொலை செய்த கும்பல்! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரியில் சின்னபேளகொண்டப்பள்ளி பகுதியை சேர்ந்த முனிராஜ் என்பவரை மர்மகும்பல் சரமாரியாக வெட்டிகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மந்திரிகிரி அருகே உள்ள சின்னபேளகொண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவர் சம்பவத்தன்று தனது பேரன் வேல்முருகனுடன் இருசக்கர வாகனத்தில் விசாரணைக்காக மந்தகிரி காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர், காவல் நிலையத்தில் விசாரணையை முடித்துவிட்டு வீட்டுக்கு  தனது பேரனுடன் இருசக்கர வாகனத்தில்  வந்து கொண்டிருப்பதை நோட்டுமிட்ட மர்ம நபர்கள்  திடீரென வேல்முருகன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை மரித்து அறிவாலால்  முனிராஜை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த முனிராஜை கண்டு அவரது பேரன் வேல்முருகன் கதறி அழுகி உள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக வந்தவர்கள் முனிராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முனிராஜ் மருத்துவமனையில் சோதனை செய்த மருதவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையை இந்த சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முதற்கட்ட விசாரணையில், முனிராஜ்  ஊரில் நடக்கக்கூடிய சட்டவிரோதமான செயல்கள் குறித்து அவ்வப்போது காவல் நிலையம் மற்றும் அரசு அதிகாரியிடம் இது தொடர்பாக புகார் தெரிவிப்பது வழக்கமாக வைத்துள்ளார்

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்தது மது பாட்டில்களை கடத்தி வந்து சட்ட விரோதமாக அதே பகுதியை சேர்ந்தகும்பல் விற்பனை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை முனிராஜ் தட்டி  கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்களுக்கும் முனீஸ்ராஜ் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் முனிராஜ் தனியாக வருவதை நோட்டமிட்டு மர்மநபர்கள் அவரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக வழக்கு  பதிவு செய்த காவல்துறை  குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Muniraj from Chinnabelakondapalli area was brutally killed by a mysterious gang


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->