குன்றத்தூரில் மதுபோதைய தகராறில் வாலிபர் படுகொலை: போலீசார் விசாரணை தீவிரம் - Seithipunal
Seithipunal


சென்னை அருகே குன்றத்தூரில், நேற்றிரவு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் குழுவால் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூர், ஒண்டி காலனி, அக்னீஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்த விஜய் (29), கார் டிரைவராக பணியாற்றி வந்தார். அவருக்கு வேலை முடிந்த பிறகு நண்பர்களுடன் மது அருந்துவது வழக்கமாக இருந்தது.

நேற்றிரவு, தெற்கு மலையம்பாக்கம் பகுதியில் உள்ள காலி இடத்தில் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் மது அருந்தியுள்ளனர். அப்போது, அவர்களுக்குள் “யார் பெரியவன்” என்ற மோதல் வாக்குவாதமாகவும் பின்னர் கைகலப்பாகவும் மாறியது. தகராறு முற்றிய நிலையில், நண்பர்கள் குழுவில் ஒருவர் அருகிலிருந்த பெரிய கல்லை தூக்கி விஜயின் தலையில் அடித்து படுகொலை செய்துள்ளார்.

வெறிச்செயலில் அவரது தலையில் கடுமையான காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விஜயின் இறப்பை உறுதி செய்ததும், அவரின் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

தகவலறிந்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசார், “விஜயின் நண்பர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னரே கொலைக்கான முழு பின்னணியும் தெரியவரும்,” என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் குன்றத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Murder of a teenager in a drunken dispute in Kunradhur Police investigation is intense


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->