தூத்துக்குடியில் பரபரப்பு... 3 சகோதரர்களை வாளால் வெட்டிய மர்ம கும்பல்... போலீசார் விசாரணை...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் மர்ம கும்பல் மூன்று சகோதரர்களை வாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கதிர்வேல் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் உசேன் (32), முகமது ஹசன் (30), முகமது ஆரோன் (27). இவர்கள் மூன்று பேரும் சகோதரர்கள் ஆவர். இந்நிலையில் நேற்று மாலை இவர்கள் மூன்று பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது, மது போதையில் சாலையில் இருந்த மர்ம கும்பல் ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது கற்களை வீசியுள்ளனர்.

இதனால் முகமது ஹசன், அவர்களிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்பொழுது முகமது ஹசனை தாக்கியுள்ளனர். இதையடுத்து அவரது சகோதரர்களும் தட்டி கேட்டதால், ஆத்திரமடைந்த மர்ம கும்பல் மூன்று பேரையும் வாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து பலத்த காயம் அடைந்த மூன்று பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று சகோதரர்களை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம கும்பல் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mysterious gang hacked 3 brothers with a sword in Thoothukudi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->