திருவள்ளூர் அருகே பரபரப்பு.! கூலிதொழிலாளியை சரமாரியாக வெட்டி கொன்ற மர்ம கும்பல்.!
mysterious gang hacked the laborer to death in tiruvallur
திருவள்ளூர் மாவட்டத்தில் கூலி தொழிலாளியை சரமாரியாக வெட்டி கொலை செய்த மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அண்ணா நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகேசன்(38). இவர் நேற்று வேப்பம்பட்டு அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்த தனது நண்பரான தேவா என்பவருடன் மோட்டார் சைக்கிளில திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து கத்தியால் முருகேசனின் தலை, இரண்டு கை போன்ற இடங்களில் சரமாரியாக வெட்டி உள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைப்பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் தப்பி சென்று உள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த செவ்வாப்பேட்டை போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு, முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் அப்பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
mysterious gang hacked the laborer to death in tiruvallur