#சென்னை || சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் ஊழியரை தாக்கிய டிப்டாப் மர்ம நபர்கள்.!!
Mysterious men attacked hotel staff who asked money for food
சென்னை வண்ணாரப்பேட்டையில் பாஸ்போர்ட் கடையில் உணவு சாப்பிட்டதற்கு பணம் கேட்டால்தால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் ஹோட்டல் ஊழியரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வண்ணாரப்பேட்டையில் கோகுல் என்பவர் பாஸ்போர்ட் கடை நடத்தி வருகிறார்.
அந்த கடைக்கு மது போதையில் வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்து வந்த டிப்டாப் மர்ம நபர்கள் ஹோட்டலில் இருந்த உணவை வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் எழுந்து சென்றுள்ளனர்.
இதனைக் கண்ட ஓட்டல் ஊழியர் அவர்களை தடுத்து நிறுத்தி சாப்பிட்ட உணவிற்கு பணம் செலுத்துமாறு கேட்டுள்ளார். அப்போது மர்ம நபர்கள் ஓட்டல் ஊழியருடன் தகராறில் ஈடுபட்டு அங்கிருந்து சென்ற சிறிது நேரத்தில் ஆறு பேருடன் மீண்டும் பாஸ்போர்ட் கடைக்கு வந்து ஹோட்டல் ஊழியர் கார்த்திக் மற்றும் வேல்முருகன் ஆகியோரை இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் கடையில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தண்டையார்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தாக்குதல் நடத்திய டிப்டாப் மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Mysterious men attacked hotel staff who asked money for food