ரூ.62 லட்சம் மோசடி! சிறிய முதலீடு..அதிக லாபம்! ஆசை காட்டி மோசம் செய்த மர்ம கும்பல்! - Seithipunal
Seithipunal


கோவை : பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறி வங்கி பெண் மேலாளரிடம் மர்மநபர்கள் ரூ.62 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியாறு பகுதியை சேர்ந்தவர் மோகனப்பிரியா. பொள்ளாச்சியில் உள்ள வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதில் ஆர்வமாக இருந்துள்ளார்.

இதற்கிடையே செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர்கள் மோகனப்பிரியாவரிடம் தற்போது பங்கு சந்தையில் முதலீடு செய்தால்  பல மடங்கு லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதை நம்பிய மோகனப்பிரியா அந்த மர்மநபர்கள் அனுப்பிய வங்கி கணக்கு எண்ணிற்கு ஆன்லைன் மூலம் பல்வேறு தாவனையாக ரூ.62 லட்சத்தை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இதுவரை முதலீடு செய்த தொகைக்கு அதிக லாபம் வந்து இறப்பதாகவும் தொடர்ந்து முதலீடு செய்யுமாறு மர்ம நபர்கள் கூறியுள்ளனர். ஆனால் மோகனபிரியா முதலீட்டு தொகையை திரும்ப கேட்ட போது தராமல் ஏமாற்றிவிட்டனர். இது குறித்து மோகனபிரியா கொடுத்த புகாரின் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mysterious persons defrauded the female bank manager of Rs 62 lakh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->