தர்மபுரி : மாயமான தொழிலாளி கிணற்றில் சடலமாக மீட்பு.! போலீசார் விசாரணை.!
Mysterious worker recovered as a corpse in the well in dharmapuri
தர்மபுரி மாவட்டத்தில் மாயமான தொழிலாளி கிணற்றில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் எரகொலானூர் பகுதியை சேர்ந்தவர் மணி(37). இவர் பெங்களூருவில் இரும்பு கடை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பிரபாவதி இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்திருந்த மணி சம்பவத்தன்று திடீரென காணாமல் போனார்.
இந்நிலையில் குடும்பத்தினர் மணி வேலைக்கு சென்று விட்டதாக நினைத்துக் கொண்டுள்ளனர். இதையடுத்து மணியிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை என்பதால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், பெங்களூர் சென்று இரும்பு கடைக்காரரிடம் இது குறித்து கேட்டுள்ளனர். ஆனால் மணி வேலைக்கு வரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மணியை பல்வேறு இடங்களில் தேடினர். அப்பொழுது எரகொல்லலூர் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் மணியின் உடல் அழுகிய நிலையில் மிதந்துள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணையில், மது போதையில் மணி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Mysterious worker recovered as a corpse in the well in dharmapuri