ஏற்காட்டில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகல்..சீமான் அதிர்ச்சி!
Naam Tamilar Katchi office bearers quit in Yercaud Shocking Seeman
நாம் தமிழர் கட்சியின் ஏற்காடு சட்டமன்ற தொகுதி மற்றும் அயோத்தியாபட்டினம் ஒன்றிய நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து கூண்டோடு விலகினர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தன்னிச்சை அதிகாரப் போக்கை கண்டித்து அக் கட்சியில் இருந்து , பல்வேறு மாவட்டங்களில் கட்சிப் பதவியில் இருந்த நிர்வாகிகள் பலரும் விலகி வருகிறார்கள். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை சேலம் மாநகர மாவட்ட நிர்வாகிகள், சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள், சேலம் மேட்டூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் என ஏராளமானோர் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கூண்டோடு விலகினர்.
இந்த நிலையில் இன்று ஏற்காடு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 200 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்கள்.

குறிப்பாக ஏற்காடு சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் சதீஷ்குமார், சேலம் தெற்கு மாவட்ட பொருளாளர் சங்கர், ஏற்காடு சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் சடையன், தொகுதி துணைச் செயலாளர் பெரியசாமி, மகளிர் பாசறை செயலாளர் நித்யா, அயோத்தியாபட்டினம் ஒன்றிய பொறுப்பாளர் கூட்டாத்துப்பட்டி கார்த்திக் மற்றும் தேவேந்திரன் உள்ளிட்டோர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் பொறுப்பில் இருந்து விலகி உள்ளதாக ஏற்காடு சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் சதீஷ்குமார் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் நாம் தமிழர் கட்சியில் கொள்கை, கோட்பாடு என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது என்றும் அருந்ததியர்கள் ஆகிய தங்களை கட்சியில் புறம் தள்ளி ஒதுக்கி வைக்கிறார்கள் என்றும் இது தங்களுக்கு கடும் மன உளைச்சலைத் தருகின்றது கட்சியில் உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை இல்லை என்ற வேதனையுடன் தாங்கள் வெளியேறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Naam Tamilar Katchi office bearers quit in Yercaud Shocking Seeman