நாகையில் பதற்றம்! ஆம்புலன்சை அனுப்ப மறுப்பு! பறிபோன உயிர்! பிணத்துடன் ஊர்வலம் வந்த உறவினர்கள்! - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டத்தில் சிபிசிஎல் நிறுவனம் ஆம்புலன்சை அனுப்பி வைக்காததால் நெஞ்சு வலியால் ஒருவர் துடி துடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் பனங்குடியில் மத்திய அரசின் பொதுத்துறையின் நிறுவனமான பிசிசிஎல் அமைந்துள்ளது. இங்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதியில் பொதுமக்களின் ஆபத்தான தேவைகளுக்காகவும் அவசர உதவிக்காகவும் அனுப்பப்பட்டு வருவது வழக்கம்.

சம்பவத்தன்று பழங்குடி ஊராட்சி ஓடைமேடு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு திடீரென இரவில் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அலறி துடித்த ராஜ்குமாரை கண்டு உதவியினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக சிபிசிஎல் நிறுவனத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் அனுப்புமாறு அந்நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அந்நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் ஆம்புலன்ஸை அனுப்ப மறுத்துவிட்டதாக கூறப்படுகிறத.  இதனால் நெஞ்சு வலையால் துடித்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமாரின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ராஜ்குமாரின் உடலை எடுத்துச் சென்று சிபிசிஎல் நிறுவனத்திற்கு முன்பாக வைத்து போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் அறிந்து அங்கு வந்த நாகூர் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை வழி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை எல்லா பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagai district one person died due to chest pain as CBCL did not send an ambulance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->