கடலுக்கு போக வேண்டாம்.. நாகை மீனவர்களுக்கு திடீர் எச்சரிக்கை.!!
Nagai fishermen not to go to sea
புயல் மற்றும் கனழையின் போது தமிழ்நாடு மீன்வளத்துறை சார்பில் சம்பந்தப்பட்ட மீனவகிராம தலைவர்களுக்கு முன்னெச்சரிக்கை வழங்கப்படும். அதன்படி சம்பந்தப்பட்ட மீனவ கிராம தலைவர்கள் மீனவர்கள் கடலுக்கு செல்வது குறித்தான அறிவுறுத்தல்களை ஒலிபெருக்கி மூலமாகவோ அல்லது கண்டோரா மூலமாகவோ உடனடியாக அறிவிக்கப்பட்டு கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் படகுகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
வங்க கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழை கொட்டு தீர்த்து வருவதால் நாகை மாவட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வங்க கடலில் 45 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் கடல் காற்று வீச கூடும் என்பதால் பைபர் படகு கடலுக்குச் செல்ல வேண்டாம் என நாகை மாவட்ட மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விசைப்படகு மீனவர்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
English Summary
Nagai fishermen not to go to sea