குடும்பத்திற்காக வேலை.. சாதிக்க துடிக்கும் திருநங்கைக்கு கை கொடுக்குமா.? சமூகம்.! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் அருகே வடக்கு பால் பண்ணை சேரி பகுதியைச் சேர்ந்த ரபியா என்ற திருநங்கை சமூக ஒடுக்கு முறையின் காரணமாக மனம் தளராமல் பெங்களூரு கல்லூரியில் அழகு கலை படிப்பை முடித்துள்ளார்  அதன் பின் தனது குடும்பத்திற்காக சுய தொழில் செய்து உதவி கொண்டு இருக்கிறார்.

தமிழக அளவில் நடந்த பல்வேறு அழகி போட்டிகளில் அவர் வெற்றி பெற்றுள்ளார். தற்போது மிஸ் இந்தியா திருநங்கைகள் அழகு போட்டிக்காக அவர் தயாராகி வருகின்றார். இருப்பினும், இந்த போட்டியில் அவர் கலந்து கொள்ள அவருக்கு பொருளாதார ரீதியாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

தற்போது, அவர் மகாராஷ்டிராவில் வேலை செய்தவாறு தனது அழகி போட்டி களில் கலந்துகொண்டு வெற்றி பெற முயற்சி செய்து வருகின்றார். அதற்கான பயிற்சியில் பங்கேற்க அவருக்கு நுழைவு கட்டணமாக 25 ஆயிரம் மற்றும் அவரது உடை, சிகை, காலணி அலங்காரத்திற்கு 2 லட்சம் வரை செலவாகும் என்று கூறப்படுகிறது 

எனவே, அவருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள் யாராவது உதவுவார்களா என்று அவர் எதிர்பார்த்து இருக்கின்றார். சமூகத்தில் நிரந்தர அங்கீகாரத்தை பெற வேண்டிய போராட்டத்தில் ஒரு சில திருநங்கைகள் மட்டும்தான் சாதிக்கின்றனர். அவர்களில் ரபியாவும் ஒருவராக இருக்க வேண்டும் என்று ரபியாவின் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagai transgender women rabiya trying To achive


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->