#தமிழ்நாடு | பாஜகவினர் மீது கல்வீச்சு! கடுமையான மோதல்! சாலை மறியல் போராட்டத்தில் பாஜக எம்எல்ஏ! - Seithipunal
Seithipunal


சூரத் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், தகுதி நீக்கம் செய்யப்பட்டார் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி.

இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளுக்கும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பாஜக மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர், பாஜகவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

மேலும், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக பாஜகவினரும் கோஷமிட, ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

அப்போது ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்திக் கொண்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து பாஜக எம்எல்ஏ காந்தி தலைமையில் தற்போது சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagarkovil BJP Office attacked


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->