20ம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு! - Seithipunal
Seithipunal


நாகூர் நாகநாத சுவாமி கோயில் தேரோட்டத்தை ஒட்டி வரும் 20ம் தேதி ஒருநாள் மட்டும், நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மாவட்ட ஆட்சியர் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது நாகூர் நாகநாத சுவாமி கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வருகின்ற இருபதாம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது 

இந்த விடுமுறையை ஈடுசெய்ய அடுத்த மாதம் 6ம் தேதி பள்ளிகள் செயல்படும் என்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக ஆண்டுதோறும் நடைபெறும் மாங்கனித் திருவிழாவை ஒட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு வரும் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து புதுச்சேரி முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பொதுவாக தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கம்.

விழாக்களை பொருத்து பள்ளிகளுக்கு மட்டுமா அல்லது பள்ளி கல்லூரி மற்றும் அரசு ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்கலாமா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்து விடுமுறை அளிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagore nagai school leave June 2024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->