நாமக்கல்லை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்! வேதனையில் மூழ்கிய முதல்வர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


நாமக்கல் : ஆயில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "நாமக்கல் மாவட்டம். இராசிபுரம் வட்டம், ஆயில்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் மெட்டாலா நோக்கிச் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் நிதிஷ்குமார், அபினேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோர் எதிர்பாராதவிதமாக 130 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தனர். இதைப் பார்த்த கணவாய்ப்பட்டியைச் சேர்ந்த திரு.குப்புசாமி, த/பெ.இடும்பன் (வயது 45), திரு.அசோக்குமார். த/பெ.மாரிமுத்து (வயது 35) மற்றும் சரவணன், த/பெ.கந்தசாமி (வயது 35) ஆகியோர் கிணற்றில் விழுந்த மாணவர்களை மீட்க கயிறு கட்டி கிணற்றில் இறங்கியுள்ளனர்.

 

இந்த மீட்புச் சம்பவத்தில் திரு.குப்புசாமி, த/பெ.இடும்பன் (வயது 45). திரு.அசோக்குமார், த/பெ.மாரிமுத்து (வயது 35) மற்றும் சரவணன். த/பெ.கந்தசாமி (வயது 35) மற்றும் சிறுவன் விக்னேஷ் (வயது 15) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

இவ்விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்கள் செல்வன். நிதிஷ்குமார், த/பெ.கண்ணன் (வயது 15) மற்றும் செல்வன். அபினேஷ். த/பெ.குப்புசாமி (வயது 15) ஆகியோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இலட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal Ayilpatti Accident CM Stalin Announce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->