#தமிழகம் || மண்சரிந்து விபத்து : ஒருமணி நேர போராட்டம்., உயிருடன் மீட்ட தீயணைப்பு அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் அருகே வீடுகட்ட அஸ்திவாரம் தோண்டியபோது, 2 பேர் மீது மண் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில், இருவரும் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஒரு உயிருடன் தீயணைப்புப் படை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர் அதே பகுதியில் அவருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக வீடு கட்ட திட்டமிட்டுள்ளார்.

அதற்காக இன்று அஸ்திவாரம் தோண்டும் பணியில் தொழிலாளர்களை வைத்து தொடங்கியுள்ளார். அஸ்திவாரம் போடுவதற்காக குழி தோண்ட மேலபட்டியை சேர்ந்த சுப்பிரமணி உள்ளிட்ட 4 தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் இருவர் பணி செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை அதிகாரிகள், குழியில் சிக்கிய சுப்பிரமணி உள்ளிட்ட இருவரை ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்டனர்.

தற்போது அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

namakkal land accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->