எங்கு சென்றாலும் சாதி பாகுபாடு காட்டிய கல்லூரி முதல்வர்.. கல்வி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை.!  - Seithipunal
Seithipunal


திருச்சி நாமக்கல் சாலையில் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி மிகவும் பழமையானது. இதில், பல்வேறு வகையான இளநிலை முதுநிலை மற்றும் ஆராய்ச்சி துறை படிப்புகள் இருக்கின்றன. 

இந்த கல்லூரியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். எனவே இதில் காலை, மாலை என்று ஷிப்ட் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது .இந்த கல்லூரியில் பால் கிரேஸ் என்பவர் முதல்வராக பணியாற்றி வந்துள்ளார். இதற்கு முன்பு அவர் ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி முதல்வராக இருந்தார்.

நிர்வாக காரணங்கள் காட்டி அவர் திண்டிவனம் அரசு கலைக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அம்பேத்கர் புகைப்படத்தை அவர் அகற்றினார் என்ற காரணத்தினால் அவர் மீது எஸ்சி எஸ்டி பிரிவு மீது பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் நாமக்கல் கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் கல்லூரியின் சட்ட விதிகளுக்கு புறம்பாக மாணவிகள் மற்றும் பேராசிரியர்களிடம் சமூகமாக செயல்படாமல் இருந்து வந்துள்ளார். மற்றும் மாணவிகளிடையே சாதிய பாகுபாடு காட்டி நடந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது புகார் எழுந்ததால் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 இது குறித்த உத்தரவை உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் பிறப்பித்து இருக்கிறார். இந்த விசாரணை முடியும் வரை அவர் நாமக்கல்லில் இருக்க வேண்டும் என்று அவரது உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal principle make caste Issue In College


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->