நாமக்கல் | வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் IT ரெய்டு.! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


நாமக்கல், எளையாம்பாளையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

வருமானவரித்துறை சோதனை நடைபெறும் வளாகத்தில் கலை அறிவியல், பல் மருத்துவம், பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. 

தனியார் கல்லூரி வளாகத்தில் காலை முதல் வருமான வரி சோதனை நடைபெறுவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 கார்களில் வந்த அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

குமாரமங்கலத்தில் உள்ள கல்லூரியில் தாளாளர் கருணாநிதியின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு செய்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Namakkal private college IT raid


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->